சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

தலையீடு!
சந்தம் சிந்தும் சந்திப்பு!

ஆண்டானை அடிமையை
அன்பான உறவினை
கூட்டான வாழ்வுக்குள்
வேண்டாத விருந்தாகி
நாட்டாமை செய்துமே
நரகத்தில் தள்ளிடும்
வேண்டாத தலையீடு!

பிணக்கதை விலக்கிடப்
புகுந்திடும் தலையீடு
பிரளயம் செய்துமே
புரட்டிடும் வாழ்வினை!
முந்திரிக் கொட்டையாய்
முந்திடும் கருத்தினில்
சிந்தனை செய்துமே
சீரெனத் தவிர்க்கலாம்!

தலை யீடு வைத்தேனும்
தாங்கிடும் பெற்றவர்
தந்திடும் தலையீடு
தருவது நிழலினை!
தன்நலம் அறியாத
அன்னையின் மடிசுகம்
நிலையான தலையீடாய்
தந்திடும் பரவசம்!

கீத்தா பரமானந்தன்25-07-23