பசுமை!
வறுமை போக்கும்
வரமாய் உலகில்
வனப்பைச் சொரிந்தே
வசந்தம் பொழியும்!
நினைக்கும் பொழுதே
நேசம் பெருக்கி
நிமிர்வாய் உலகைக்
நிறுத்தும் பசுமை!
வானப் பொழிவாய்
வசந்த ருதுவாய்
கானல் விரட்டும்
கன்னல் வடிவம்!
கோனும் குடியும்
கோபுரம் ஆக
தானக் கொடையாய்
தரணியில் பசுமை!
உணவை உயிர்ப்பை
உவக்கும் மூலம்
உழைப்பை உயர்த்தும்
கனவுத் தாகம்!
பிணக்கம் அற்ற
பிறப்பின் தேடல்
வணங்கிக் காப்போம்
வளமாம் பசுமை!
கீத்தா பரமானந்தன்26-06-23