சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

தைமகள்!
சந்தம்சிந்தும் சந்திப்பு!

தந்தானாத் தந்தானாப் பாட்டுப் பாடித்
தித்திப்பாய் வருகின்றாள் தை மகளாள்!
சிந்தையினை மெருகேற்றும் சுடர் ஒளியாய்
சிறப்புகளைத் தாங்கியுமே சீரோடு வருறாள்!

வித்தாரக் கனவுகளை விருப்ப்பாக்கும் விழைச்சலிலே
வீறுகொண்ட உழைப்பினையும் வேண்டியுமே நிற்கின்றாள்!
சொத்தாகி நல்லுறவைச் சொரிந்திடவே அழைக்கின்றாள்
சோதியென நம்பிக்கையின் சுடராகி மிளிர்கின்றாள்!

பற்றோடு சொல்கின்றேன் பகர்ந்தவைக்கு நன்றிகளை
பாரெங்கும் நிறைத்திடுவாய் பரவசத்தின் குளிர்ச்சியினை!
வற்றாத இன்பத்தின் வனப்பாக நின்வரவு
வையமெல்லாம் மகிழ்ந்திடவே வந்திடுவாய் புத்தாண்டாய்!

கீத்தாபரமானந்தன்
20-12-2022