பாமுகம்!
நற் பாதைதனைக் காட்டிடும் ஏர்முகம்
வாதைகளைப் போக்கியுமே வனப்பாகும் மலர்வனம்
போதையுடன் சுற்றியுமே பெற்றிடுவார் கனிரசம்
கீதையென மொழிதனையே அணைத்திருக்கும் பெரும்வரம்!
வந்தவரும் போனவரும் வரைவதெல்லாம் தனிரகம்
முந்தியுமே நிற்கின்றோர் முரசறையும் நற்பத்திரம்
சிந்தைதனைத் தீட்டியுமே சீர்படுத்தும் அற்புதம்
அந்தமின்றித் தருவதிலே ஆற்றலதன் இருப்பிடம்
மன்றினிலே பெற்றிடட்டும் மாறாத தனியிடம்
வென்றிடட்டும் என்றைக்கும் வெற்றியதன் நிறைவிடம்
தந்திருப்பேன் நெஞ்சார்ந்த வாழ்தினையே களிப்புடன்
சொந்தமென மனதிருத்தி வைத்திருப்பேன் தனியிடம்!
நன்றி
கீத்தா பரமானந்தன்
13-06-2022