சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

தீயில் எரியும் தீவு!

அதிகார ஆட்டம்
அகம்பாவ மோகம்
விதியாக மாறி
விரட்டிடும் கோலம்!

கதியற்று மக்கள்
கனன்றிட்ட வேகம்
கனலாகி எழுந்தே
கருக்கிடும் அவலம்!

பாவத்தின் சம்பளமாய்
பார்க்கின்ற காட்சி
சாபத்தின் விளைவைச்
சாற்றிடும் ஆட்சி!

அன்று இட்டதீ
அனலைக் கக்குது
கொன்று போட்டது
இன்று கிளம்புது!

தீயில் எரியும் தீவு
தினமும் வேகுது நெஞ்சு
போசுங்கிப் போகட்டும் வஞ்சம்
பொறுப்போடு நிமிரட்டும் ஈழம்!

கீத்தா பரமானந்த்ச்ன்17-05-2022

தீயில் எரியும் தீவு!

அதிகார ஆட்டம்
அகம்பாவ மோகம்
விதியாக மாறி
விரட்டிடும் கோலம்!

கதியற்று மக்கள்
கனன்றிட்ட வேகம்
கனலாகி எழுந்தே
கருக்கிடும் அவலம்!

பாவத்தின் சம்பளமாய்
பார்க்கின்ற காட்சி
சாபத்தின் விளைவைச்
சாற்றிடும் ஆட்சி!

அன்று இட்டதீ
அனலைக் கக்குது
கொன்று போட்டது
இன்று கிளம்புது!

தீயில் எரியும் தீவு
தினமும் வேகுது நெஞ்சு
போசுங்கிப் போகட்டும் வஞ்சம்
பொறுப்போடு நிமிரட்டும் ஈழம்!

கீத்தா பரமானந்த்ச்ன்17-05-2022