உழைப்பாளி
நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/
நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/
சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/
உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/
தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத் தூணாய்/
நேசமாய்த் தொடரும் வேசமற்ற கடிகாரம்/
ஒட்டிய வயிறே நித்திய சொந்தமாய்/
செக்குமாட்டு உழைப்பில் தேயும் உருவாகி/
சோர்வறியா உடலோடு சுகமறியா வாழ்வின்/
வேதனைக் கணங்களின் நித்திய போராளியாய்/
வென்றிடும் முனைப்பில் நின்றிடுவான் நிமிர்வாய்/
விடியலைக் காணா ஒளியாய் உழைப்பாளி //
கீத்தா பரமானந்தன்
10-05-22