மழைநீர்
கருமுகிலைக் கிழித்துக் காற்றினிலே பரவி
வருகின்றாய் மண்ணுக்கு வானக் கொடையாகி
மருவிநீ நின்றிட்டால் மண்மகளும் மலடாகி
உருகி வெடித்திட்டே உழன்று துடித்திடுவாள்!
மழைநீரே மண்ணின் உயிர்ப்பாய் நீதானே
தழைக்கின்ற பயிர்களின் தாகம் தீர்த்திடவே
உழைக்கின்ற மக்களின் உறுதுணைக் கரமாக
அழைக்கின்றோம் உன்றனையே அணைத்திடுவாய் காதலுடன்!
ஓர்மமுடன் வந்தே ஓடாதே வெள்ளமென
பாரதுவும் தாங்காது பதைபதைதே நிற்கிறதே
தார்மீகக் கடமையெனத் தந்திடவா மும்மாரி
வாரிப் பொழிந்திடவே வாஞ்சையாய்க் காத்திருப்போம்
தாரணியைக் காத்திட தஞ்சமே மழைநீரே!
கீத்தா பரமானந்தன்27-09-2022