வியாழன் கவிதை

கவிதை நேரம்-11.07.2024 கவி இலக்கம்-1888 கஞ்சா ———-

Jeya Nadesan

கவிதை நேரம்-11.07.2024
கவி இலக்கம்-1888
கஞ்சா
————–
அகில உலகமே பேசும் பொருளாக கஞ்சா
மாணவர்களிடையே வாஞ்சையுடன் கஞ்சா
பஞ்சாய் பறக்குது போதையாக கஞ்சா
உடல் உறுப்பு கொள்ளை கொள்ளும் கஞ்சா
கஞ்சப் பயல்கள் களவாக விற்பனையில் கஞ்சா
பெற்றோரை கடனாளியாக்கும் கஞ்சா
துஞ்சாமல் இளையோரிடம் சமமாக ஏற்குது கஞ்சா
விஞ்சும் உலகினை மிஞ்சுது கஞ்சா
விஞ்ஞான உலகிற்கு மருந்தாகுது கஞ்சா
வலி போக்கும் மயக்க மருந்தாக கஞ்சா
அளவுக்கு மிஞ்சி பாவிப்பில் நஞ்சாகுது கஞ்சா
வட கிழக்கு மாகாணங்களில் அடிமையில் கஞ்சா
வாழ வைக்கும் உயிர்களை கொல்லுது கஞ்சா
குடும்ப சீரழிவிற்கு உதாரணமாய் கஞ்சா
இறுதியிலே மரணத்திற்கு இட்டு செல்லும் கஞ்சா