சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவி பத்மாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191
கவித் தலைப்பு !
“எண்ணம்”

என்றன் எண்ணம் எங்கும் ஏக்கம்
நன்றாய் நாமும் நலமுடன் வாழும்
நாடும் வேண்டும்
நாளை மலருமோ
ஓடும் வாழ்க்கை
ஓய்வு தந்திடுமோ எங்கே சென்றாலும் எப்படி வாழ்ந்தாலும்
தங்குமிடம் ஒன்றே தவத்தின் பயனன்றோ எண்ணத் தோட்டத்தில் ஏழையின்
வண்ணகனவு மண்ணில் மலர்ந்து மனதைக் கொல்லுதே அச்சம் கவலை
அகதி பற்றியே
துச்சமாய் எங்களை துரத்துதே சோதனை ஆயுளும் போனதே அண்டை தேசத்திலே நோயும் நொடியுமாய் நொந்த வாழ்க்கையாய் உரிய தேசத்தில்
உரிமை இல்லையே பறிகொடுத்து வாழ்கிறோம்
பாழ்பட்ட வாழ்க்கையை கற்றதும் பெற்றதும் கையளவு என்றேனும் சுற்றமும் வாழ்ந்திடும் சொந்தநாடு இல்லையே குடியுரிமை இல்லாத கொடும்பாவி நாங்களன்றோ
மடியும் வரையிலும் மக்களுக்கு
மண்சொந்தம்
இல்லையோ
என்று எண்ணம் எண்ணி ஏங்குதே
குன்றி வாழும் கொடுமைகோலம் ஆனதே

நன்றி வணக்கம்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர்களாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻