சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவி பத்மநாதன்.

“சந்தக் கவித்தளம் வாழியவே”

பாமுகப் பந்தலிட்டு
படர்ந்திருக்கும் பூக்களே
நான்முகன் இறையருளின்
நற்றமிழ் கவிஞர்களே

கவிப்பூக்கள் இருபதும்
கைத்துணையாய் இருபத்தும்
புவிமீதில் பூத்திங்கே
புகழ்மணம் வீசுதே

எழில்மிகு கவிப்பூவில்
என்னையும் ஒருபூவாய்
பொழிவின் தென்றலாய்
புதுவரவாய் இணைத்தே

தத்தி தத்தி கவிபடைக்க
தைரியம் தந்தே
நித்திய வரிகளின்
நிதான விந்தை

அதிபர் அண்ணாவும்
அவரது இணையாளும்
நதியாய் தோழமையாய்
நட்புடன் பேணியே

ஜெயம்தரும் பாலகராம்
ஜெயபால சகோதர
இயற்றிடும் பாவரிகள்
இளமை துள்ளுமே

அகவைஅறுபதிலும்
ஆற்றல் இருபதாய்
முகத்தில் கவிரசம்
முன்வந்து பாயுமே

வாழிய பல்லாண்டு
வாழ்க்கை ஆரோக்கியமாய்
ஆழிப்பேரலை
ஆற்றல் பெருக்குடனே !
————————————-
நன்றி வணக்கம்🙏
கலாதேவி பத்மநாதன்
ஈழக்குடியிருப்பு தமிழ்நாடு
இந்தியா.