சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவிதை தலைப்பு

கல்விக்கண் திறந்த காமராசர்

சிவகாமி குமாரசாமி செதுக்கிய சித்திரம் தவப்புதல்வர் விருதுநகர்
தமிழகத்தின் பொக்கிஷம்

மனிதருள் மாணிக்கம் மனிதகுல காவியம் புனிதராய் புகழ்சூட்டி போற்றுகின்ற ஓவியம்

பள்ளி உளிகொண்டு பாமரர் விழிதிறந்த தெள்ளிய ஞானத்தின் தீபச்சுடர் ஆவார்

மதிய உணவுத்திட்ட மாண்புமிகு தந்தை இவர்
புதிய புரட்சி செய்த பொற்கால சிற்பி இவர்

சட்டங்கள் கற்றதில்லை சாதனைகள் குறைந்ததில்லை பட்டங்கள் பெற்றதில்லை பள்ளியைகை
விட்டதில்லை

ஞாலம் போற்றும் ஞானம் தந்தவரை காலன் அழைத்தாலும் காலம் வாழ்த்திடுமே

வாழ்க பகலவனே வளர்க மதிமுகமே வாழ்த்து மலர்தூவி வாழ்த்துகிறோம் வாழியவே

நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்திய

ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த கவிஞர் அவர்களுக்கு நன்றிகள் கோடி சகோதரரே🙏🏻🙏🏻🙏🏻