சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
பாமுகம்
பாமுக பந்தலின்
தோட்டம்
பல்வகை முகங்களின் தோற்றம்
பூமுகம் மலர்ந்து
பூக்கும்
புன்னகை இதயங்கள் மணக்கும்
நற்றமிழ் நித்தமும் பொழியும்
நன்செய் முளைப்பயிர் விளையும்
வெற்றி வாகை
சூடி
வெள்ளி வாழ்த்துகள் கோடி
முத்துகள் விலையும் கல்விக்கூடம்
முத்தமிழ் தவழும் கலைக்கூடம்
வித்தகர் பலரை விதைத்தநிலம் விரும்பிய திறனை வளர்த்ததளம்
வாழ்க லண்டன் வானொலியே
வீசுக பாரினில் பட்டொலியே
வாழ்க என்றே வாழ்த்துகிறேன் வந்தனம் தந்தே வணங்குகிறேன்
நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
வெள்ளிவிழா கண்ட
வெள்ளை உள்ளங்ளான
அதிபர் அவர்களுக்கும்
வாணிசகோதரி அவர்களுக்கும்
கவிஞர் சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்கும் பாமுக
உறவுகள் அனைவுக்கும்
வாழ்த்துகள் உறவுகளே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻