சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவி தலைப்பு –
தந்தையின்
தாயககனவு

ஆசையாய் தந்தையும்
அன்னையும் தாயகம் – திரும்பிட
காசையும் சேர்த்தனர்
கஞ்சிக்கும் கூலுக்கும்

பூசையும் செய்தனர் – ஈழ
பூமியில் விடிவுவர
ஓசையின்றி நாடுசெல்ல
ஓயாது உழைத்தனர்

கடவுச்சீட்டு வரும்வரை
காத்திருந்த வேளையில்
தடம்மாறிய பயணங்கள்
தலையோடு போனதுவே

மனத்தினில் ஏக்கத்தோடு – தந்தை
மரணித்து போனாரே
கனவுகளும்
நினைவுகளும் கண்ணீராய் கரைந்தனவே

தலைமுறை மூன்று
தள்ளாடி நிற்கின்றோம்
இலைமறை காயாய்
இந்திய குடியுரிமை

கடலோரம் மண்கோட்டை கட்டிவைத்து புலம்பெயர்ந்தோம்
நடமாடுதே மனக்கோட்டை
நாட்டிற்கு தீர்வுவேண்டி

அலைபாயும் மனத்துடன்
அகதிகள் நாங்கள்
விலைபேசும் ஈழத்தின்
விதியென்று மாறுமோ😭😭😭😭😭😭😭

நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன்
ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா