சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு

குதியுந்து குதூகலம்

இருசக்கர குதியுந்து இருகரம் கற்றுக்கொள் இருதயத்தில் தெம்புடன் இயக்கிட கற்றுக்கொள்

அவசர தேவைக்கு அழைத்திட ஓடிவரும் கவலையா ஆபத்தா கைகொடுத்து உதவிடும்

பணிப்பெண் பயணத்தில்
பக்கத்துணை
பேணிடும்
அணிகலனில் ஒன்றாக அதுஉன்னை காத்திடும்

தன்கையே தனக்குதவி தைரியம் பிறந்திடும் புன்னகை மகிழ்வுடன் புதுப்பொலிவு தந்திடும்

அண்ணன் தம்பி அன்பின் உறவுகளும் கண்அவரும் பக்கமில்லை
கைகொடுக்கும் தோழனாய்

பள்ளிவிட்டு
சோர்ந்துநான்
பாதம்நோக
நடக்கிறேன்
எள்ளியே நட்புவட்டம் என்னைப்பார்த்து
நகைக்குதே

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா

சகோதரர் பாவை அண்ணா
எண்ணத்தை எடுத்தியம்பி
எழுதத் தூண்டியவர் வண்ணக் கவியாளர் வாழ்த்துகள் கோடி