சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – விருது
நல்லாசிரியர் விருதினை
நான்பெற்ற தருணம் நல்லதோர் மனத்தினர் நான்குபேர் வாழ்த்தினர்
மதியின் புகழ்ச்சி மனத்தினில் மகிழ்ச்சி விதியினை இகழ்ச்சி வினையால் நெகிழ்ச்சி
ஆசான் குலத்திற்கு அழகு சேர்த்தவளாய் பேசாமடமை உறவுகளும்
பேரின்பமும்
பெரும்வாழ்த்தும்
ஈழத்துத் தமிழச்சியே இந்தியத் திருநாட்டை நேசி
வாழ்த்தியே அன்னைதந்தை வாழ்கவென ஆசி
பட்டம் பெற்றுபலர்
பணியின்றி பாதைமாற சட்டதிட்டம் தாண்டி சாதித்ததில் பெருமிதம்
வரலாற்றில்
நான்பெற்ற
வரமென எண்ணுகிறேன் கரத்தினில் எழுதுகோல் காலமெல்லாம் சாதிப்பேன்
வாழ்த்திய உள்ளங்களை
வணங்கி நிற்கின்றேன் வாழ்க்கை பயணத்தின் வழித்துணை உறவுகளே
🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா