சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு. –
பட்டினி (உண்மைக் கதை)
பட்டினிக்கு ஓருயிர் பலியான பரிதாபம் தொட்டில் குழந்தையாய் தவழ்ந்தான் என்தம்பி

ஈரத்துணி போர்த்தி இல்லத்தில்வாடி வறுமையால்
வீரத்தாய் விதைத்த
வித்துகள் ஆறுடன் அன்னைநின்றாள்

பசிஎன்று கேட்டாலும் பானையில் ஒன்றுமில்லை
கசியும் கண்களில் கண்ணீர் துளிகள்மட்டும்.

தந்தை கொஞ்சகாலம் தள்ளியிருக்க
தவித்திருந்தோம் சொந்த உறவுகளும் சோதனையால் விலகி நிற்க

வறுமை வாட்டிடவே வழிப்பயணம்
கல்லுடைக்க சிறுகுழந்தை பாலகனை சோகம் சூழ்ந்தனவே

பட்டினியை
போக்கயெண்ணி பணம்தேடித்
தாய்உழைக்க
சட்டப்படி ஊசிகளை சரிவர போடவில்லை

போலியோ தாக்கமென போனதுவே
கைகால்முடங்கி தூலியாடும் குழந்தையவன் துவண்டிட்டான் தரையினிலே

ஆண்டுகள் இருபத்தொன்று அன்னைமடி குழந்தையவன்
வேண்டாத கோவிலில்லை விட்டுப் பிரிந்தான் இறுதியிலே

சொந்தநாட்டுப் பட்டினியில் சோகத்தின் தொடர்கதையே
இந்திய தாய்நாட்டில் இறுதி அடக்கம் இழந்துவிட்டோம்

😭😭😭😭😭

🙏🏻🙏🏻 நன்றி வணக்கம்🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா