சந்தம் சிந்தும் கவிதை

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு –
நாடே என் நாடே

என்ஈழ நாடே
ஏன்பிரிந்தேன் உன்னை வன்கொடுமை என்னை வாட்டியதே வீனே

உரிமைதனை இழந்தேன் உறவினையும் இழந்தேன் அரியணையில்
இல்லைநான்
அற்பஉயிர்
ஒன்றேமிச்சம்

பட்டம்பலப் பெற்றேன்
பதவிஒன்றும் இல்லை சட்டம்போடும் பணியில் சம்பளமோ அற்பம்

குடியமைத்துக் கொண்டேன்
குடியுரிமை இல்லை அடிமை வாழ்வை சூடி அனுசரித்து வாழ்ந்தேன்

அகதியென்று ஒதுக்க அனாதையாய் நின்றேன்
முகத்திரை கிழித்து முத்திரையை இழந்தேன்

விட்டு பிரிந்ததாலே விலகிப்போனாய் நாடே
தொட்டணைக்க ஏக்கம்
தொடுவானம் தூரம்

என்தாய்நாடே உன்னை என்று வந்தடைவேன் அன்றென்னுள்ளம் ஆர்ப்பரிக்கும் அகமகிழ்ந்து 😭😭😭😭😭

🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா