சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

கனவு மெய்ப்படல் வேண்டும்
——————————————-
அன்னனை மண்ணில் கால்பதுத்து
ஆறிடல் வேண்டும்
உண்மை அன்பு கொண்டவரை
அறிந்திடல் வேண்டும்
கொடுமை யற்ற உலகந்தணை
படைத்திடல் வேண்டும்
கொடுங் கோண்மை அரசுகளை
அழித்திடல் வேண்டும்
தனிமனித உரிமை தனைக்
பெற்றிடல் வேண்டும்
இனியில்லைத் துன்பம் என்று
எண்ணிடல் வேண்டும்
காமுகர்கள் வாழ்வு தனைக்
கரைத்திடல் வேண்டும்
கருணை உள்ள மனிதரைக்
காத்திடல் வேண்டும்
இவை எல்லாம் மெய்யாகி
இருந்திடல் வேண்டி
இறைவா உன் மலர்ப்பாதம்
வணங்குகிறேன் போற்றி/

கமலா ஜெயபாலன்