சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

நிட்சயதார்த்தம்

இருவீட்டார் சேர்ந்தே இருமனங்கள் இணைய
திருமணம் நிட்சியர்த்து தந்திடும் பந்தம்
தருவாய் வளர்ந்து தரணியல் வாழத்
திருவாய் மணவியல்த் தீர்வு

பெரியோர் கூடி பெருமிதம் கொண்டு
உரிமையுடன் னொன்றாய் யுறிதி செய்து
புரிதல் கொண்டு பொறுப்புடன் செய்யும்
விரிவான செயலுடன் வீறு

உற்றார் உறவின் உள்ளம் குளிரப்
பற்றாய் யழைத்துப் படித்திடும் ஓலையும்
கற்றவர் பெரியோர் கருத்துடன் ஒன்றி
வற்றாது வாழ்த்தும் வரம்

மணமகனுடன் பெண்ணுமாய் மாலையும் மாற்றியே
குணமுடன் வாழத் கொடுக்கும் உறுதி யிதுவாய்
உணவுடன் பட்சணம் உண்டு மகிழ்ந்து
மணநாள் அறியும் மரபு