விழிப்பு
காரியம் யாவும் கருத்தாய்ச் செய்ய
கண்மூடி விழித்திரு இதுவே ஆண்மா
உரிய நேரத்தில் உசாரய் இருந்திடு
உனக்குப் புரியும் உளத்தின் வெற்றி
மனமும் மூழையும் மந்திரக் கட்டு
மௌனமாய் சிந்தித்தால் மாற்றம் புரியும்
தினமும் கடமை சிறப்பய்ச் செய்தால்
தனமும் தானுயமும் தன்னீல் வருமே
கண்கள் விழித்தால் காணும் செயல்கள்
காரியம் யாவும் கண்முன் காணும்
மனமும் விழித்தால் மகிழ்வுறும் செயல்கள்
மதியுடன் விழித்திரு மாயை விலகும்
கமலா ஜெயபாலன்