சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

அன்று என்னை உலகற்கு அளித்தாய்
இன்று உன்னை எண்ணிப் புலம்புகிறேன்
கண்ணாய் என்னைக் காத்து வளர்த்தாய்
மண்ணில் உயர்த்த வண்ணம் குவித்தாய்

எத்தனை யோசனை இதயத்தில் இன்று
அத்தனையும் இழந்து அகதியாய் வந்த
அந்த நாளை யோசித்து வருந்துவதா
உப்புச் சிரட்டையும் மிஞ்சாத ஊர்கதை

சொல்லச் சொல்லச் சோகம் வருகுதே
மெல்ல இதய மேனி நடுங்குதே
வெல்ல முடியுமா விதியை மதியால்
இல்லத்து உறவுகளை இழந்த காலத்தை

உற்ற உறவுகள் ஊர்விட்டு போனதும்
கற்ற கல்வியை குறையில் விட்டதும்
இப்படி இப்படி எத்தனை யோசனை
என்று மறையும் இத்தனை யோசனைகள்/