சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

தீப ஒளி
கார்த்திகை தீபம் கண்ணுக்குள் நிற்கிறதே
பார்த்து இரசித்து பலகாரம் உண்டு
ஏற்றுவோம் விளக்கு எட்டுத் திசையும்
சாற்றுந் தீபம் சத்திய வாழ்வை
கூட்டாய் குடும்பம் கூடி நின்று
பாட்டுப் பாடி பக்குவமாய் ஒளியேற்றி
இருள் எனும் மாயை விலக்கி
அருளும் கொண்டு அமைதியும் அடைய
ஊரின் நினைவு உளத்தை வாட்ட
புரிதலுடன் வீட்டுக்குள் விளக்கு ஏற்றுவோம்

கமலா ஜெயபாலன்