ஆறுமனமே
ஆறு மனமே ஆறு கவிவரி
மாறும் காயங்கள் மனதில் நம்பிக்கை
எந்தையும் தாயும் ஏற்றிய ஒளிநாம்
பந்தம் விட்டு பறந்தே வெளிநாட்டில்
சொத்தம் தொலைத்து சுகங்கள்இழந்து
கத்தும் சத்தம் காதுக்கும் கேட்காமல்
அன்னையை பிரிந்தும் ஆன துயரம்
பின்னும் பட்டதுயர் பேசவும் முடியாது
அடுக்கடுக்காய்ப் பிரிந்த அத்தனையும் ஆறுமா
குடும்பம் சிதறி குதுகலம் விட்டு
கண்ட காட்சிகள் கனவென மாறாதா
என்று எண்ணி இதயமும ஆறாதோ
கமலா ஜெயபாலன்்