அலையோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
அலையின் ஓட்டம் அதிருது உலகம்
கலையும் காவியமும் கைக்குள் அடக்கம்
மலையென மக்கள் மயங்குக் கிடந்து
தலையைத் தொலைத்து சங்கடம் கொள்கிறார்
காலை தொடங்கினால் கைக்குள் அலைபேசி
மாலை வந்தும் மறந்திட முடியாமை
வேலை எல்லாம் வெட்டியாய் கிடக்க
தலையில் கைவைத்துத் தவிக்குது குடும்பம்
அலையோசை ஆடிவந்து அடங்கிப் போகும்
காலை நனத்துக் கழுவும் இன்பம்
வெள்ளை நுரையும் வீசும் காற்றும்
கள்ளமில்லாக் கண்ணிற்கு இனிமை
இசையின் நாதம் இனிதாம் வாழ்வில்
அலையாய் வந்து ஆனந்தம் கொள்ளும்
கலையின் நாதம் கணீரென அலையாய்
சிலையும் பேசும் சித்தம் நெகுழும்
கமலா ஜெயபாலன்