மழைநீர்
கானமயில் ஆட கார்மேகம் ஓட
மாமயிலும் மழைகண்டு மதுரமாய் ஆட
தானாக மழைபொழிய தரையெங்கும் தண்ணீராய்
தருகின்ற குளிர்மையிலே தரணியும் மகழ்கிறதே!
வான்பார்த்து வயலுழும் விவசாயி ஏர்பூட்டி
கான்வெட்டி வரம்புகட்டி காட்டையும் களனியாக்கி
பார்ருண்ணப் படைத்திடுவான் பார்புகழ வாழ்ந்திடுவான்
மார்தட்டி மகிழ்திடுவான் மங்களமாய் வாழ்ந்திடுவான்!
குளமதனில் நீர்தேக்கி குறையாமல் போகமிரண்டு
தளராமல் விதைத்திடுவான் தாங்கிடுவான் சமூகத்தை
காய்கறியும் பயிரிட்டு காத்திடுவான் மழைநீரால்
தாயாக எம்நிலமும் தந்திடுமே வாழ்வதனை!
ம