மாட்சிமை மிக்க மகாராணி
அன்பில் சிறந்த ஆளுமை மிக்க
பன்பில் பனித்த பக்குவ மங்கை
இளமை வயதினில் இல்லாள் ஆகி
தளரா மனத்துடன் தாங்கி மனைவியாய்
மகவுகள் பெற்று மகாராணிப் பட்டமும்
தகவுடன் ஏற்றுத் தாரணி ஆண்டு
மக்களை மனதால் மகழ்வித்த மாட்சிப்
பக்குவம் கண்டோம் போய்வா பொக்கிசமே!
கலாசாரம் பேணி காத்தார் குடும்பம்
கடமை கொண்டு காரியம் ஆற்றி
உலக சமாதானம் உணர்வுடன் பேணி
உண்மையாய் வாழ்ந்த உத்தமி இவரே
எழுபது ஆண்டுகள் இளமை மனதுடன்
பழுதுகள் இன்றி பதவியில் உயர்த்து
வாழ்ந்தார் வடிவாய் வையகம் போற்ற
போய்வா மகளே போய்வா மாகாராணியே!