சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மதி
வெண்மதி வானில் வெண்முகி லோடும்
வியதகு மழகுடன் பாரில்
தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர
தந்திடும் தன்மையும் பாரீர்
பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய்
பிள்ளைகள் பாட்டிலும் வாராய்
வண்ணமாய் யீசன் வளர்சடை மேலே
வதித்திடும் வசந்தமும் பாராய்