சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள்
கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி
விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே
பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால்
பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும்
காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய
பாதவிரல் கோலமிட பேதையவள்-மோதலினால்
என்மனமும் பேதலிக் ஏங்குகிறேன் உன்நினைவால்
முன்னின்று கன்னியவள் மூச்செறிந்து-அன்பினாலே
இன்பயூற்றில் ஏங்குகிறாள் ஏற்றமுடன் கண்களினால்
சொன்னபதல் சொர்க்கமடி சுந்தரியே-என்னவளே
வேல்விழியால் வேகமுடன் வந்தபதில் சொர்க்கமடி
பால்வடியும் உன்வதனம் பார்வையால் -கால்பார்க்க
பொங்கிவரும் நீரூற்றாய் போனேனடி பெண்ணரசி
அங்கதனில் கண்விழித்தேன் அஞ்சுகமே-நெஞ்சமதில்
காதலினால் வாழ்வினிலே களித்திடலாம் என்னாளும்
மோதலிலும் காதல்வரும் முனைப்பு