சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

கள்ளமிலா வெள்ளை நிலம்
களிப்படைய
பெய் மழையே
களனிகளும் நிறம்பியோட பொழிவாய்
அள்ளி வரும் காற்றினிலே ஏந்திலந்து பூமிதனில்
ஏர் பிடிக்கும் உழவருக்காய் பொழிவாய்
வெள்ளத்தை தேக்கிவைத்து
விவசாயம் பெருகிடவும்
வேகமுடன் பெய்திடுவாய் மழையே
பள்ளி செல்லும் மாணவரும்
பாய்ந்தோடி விளையாட
பக்குவமாய் கொட்டிடுவாய் மழையே