என்னுயிர்க் கண்ணம்மா
—/////—-//:/:::::::-/::-//:::
என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட
தன்னைத் தந்த தங்கமே என்னுயிரே
முன்னை எனைவிட்டு புணுபுணுத்து
பின்னைப் புறம்சொன்ன பித்தரை
வன்மம் போக்க வந்து உதித்து
அன்னை ஆக்கிய ஆருயிர் கண்ணம்மா
உன்னை நினைத்தால் உயிரே உருகுதடி
மன்றி்ல் என்னை மனிதனாக்கிய மரகதமே
குன்றாக் குலக் கொடியே கண்ணம்மா
நன்றி நான்சொல்வேன் நாயகியே உந்தனுக்கு
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா/
வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்து சிறகடிக்க
எண்ணத்தல் உன்நினைவு இதமாய் இனிக்குதடி
பண்ணோடு பாட்டிசையும் பரதமும் பக்குவமும்
எண்ணத்தில் இனிக்குதடி என்மகளே கண்ணே/
முல்லை மலரே முத்தே மரகதமே
மல்லிகையாய் மணம் வீசும் மானே
எல்லை இல்லா இன்பத்தை எமகளிந்து
கல்லையும் கரைக்கும் கனிவான பார்வையினால்/
உள்ளம் உருகுதடி உத்தமியே என்னுயுரே
கள்ளம் இல்லா காரிகையே கண்ணே
என்னகத்தே என்றும் எழிலாய் வீற்றிருக்கும்
என்னுயுர்க் கண்ணம்மா என்னுயர் நீயன்றோ