பழமை
ஓடியல் கூழும் உளுத்தம்மாப் பிட்டும்
ஒன்றாய்ச் சேர்ந்து உண்ட காலம்
பாண்டியும் பம்பரமும் பண்புடனே ஆடியும்
பாசம் வளர்த்த பரம்பரைகள் நேசம்
குப்பி விளக்கில் குனிந்து படித்த
குதுகலமும் நெஞ்சு இனிக்கும் நினைவுகள்
மாட்டு வண்டிச் சவாரியும் சலங்கையும்
மாமன் வாங்கித்தந்த மத்தாப்பு வெடியும்
ஏர்பூட்டி வயலுழும் எருது மாடுகளும்
ஏங்கினாலும் காண்போமோ இனியொரு காலத்தில்
தொழில் நுட்பம் விஞ்ஞானம் தோன்றியும்
தோன்றாத நோயெல்லாம் தோன்றிய போதிலும்
பாட்டி சொன்ன பழமை வயித்தியம்
புதுமையைக் கண்டது தீரா நோயில்
மாறாத மரபது குண்டு மணியாய்
குப்பையில் கிடந்தாலும் நின்று நிலைத்திடும்
குவலயத்தில் தூண்ட மணி விளக்காய் /