சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

தீயில் எரியும் நம் தீவு
எரியுது எரியுது ஏற்றிய பாவம்
புரியுது புரியுது போற்றிய தெய்வம்
எங்கள் கண்ணீர் இட்ட சாபம்
பொங்கும் தீயாய் பரவுது தீவில்
கண்கள் இருந்தும் குருடாய் அலைந்தோம்
கண்ணீர் விட்டோம் கதறிதுடித்தோம்
எண்ணரும் உயிர்கள் இழந்த சோகம்
மனதால் மறையுமா மறக்கவும் முடியுமா
எழில் மிகு எங்கள் இலங்கைத் தீவு
அழிந்து போகுது அன்னியர் வரவால்
அண்ணன் தம்பி ஆட்சி யாலே
விண்,மண்,கடலும் விற்பனை ஆச்சு
எரித்தல் என்பது எமக்குப் புதிதா
எத்தனை முறைகள் இனவெறி தீயில்
எரிந்தன மனைகள் எம்இன உயிர்கள்
ரத்த வெள்ளம் முள்ளி வாய்க்காலில்
செத்தவர் லட்சம் சித்திர வதையில்
மொத்தமாய் சரன் புக முதுகின் பின்பறம்
சுட்டனர் வெறியர் சுதந்திரம் கோர. கட்டிய கண்ணும்அம்மண கோலமும்
கற்பினை சூறை யாடிய கொடுமையும்
எப்படி மறப்போம் இது வெறும் பொறியே
எரியும் தமிழர் எண்ண இக் கொடுமைகள்
எரியும் இலங்கை என்றோ ஒர்நாள்
தீர்ப்பை ,தீர்வை தீயே தரும் பார்
தீவே தமிழர் தீவாய் வரும் பார்