குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/
குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/