சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

எதிர்ப்பு அலை
————————
எதற்கும் வேண்டும் எதர்ப்பு அலை
அதற்கு தேவை ஆளுமைச் சக்தி
மதம்பிடித்த யானையை மடக்க அங்குசம்
இதமாய் வாழ்வில் இருந்தால் அதுஎம்வசம்

நோயை எதிர்க மருந்து வேண்டும்
தாயைக் காக்க தனையன் வேண்டும்
கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும்
பாரை ஆளப் பக்குவம் வேண்டும்

மமதை கொண்டு மதியாதவன் மாழ்வான்
தமது வாழ்வில் தலையும் குனிவான்
எதிர்ப்பு ஏறும் இன்னல் சேரும்
மதிப்பும் கெடும் மனதும் வாடும்

நல்லது எதுவோ நாமும் செய்வோம்
வல்லமை பேசி வீழ்ந்தவர் பலரே
வளர்வோம் பண்பாய் வார்த்தையும் அளவாய்
உளமது நோகா நோண்பைக் காப்போம்