களையெடுக்கும் கன்னிப்பெண்ணே
—————————-
களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/
கண்ணே உன்னக் கண்ட தனால்/
வயல்காட்டு வரம்பினிலே
வந்துநானும் சுத்துறேன்டி/
பயலைப் பிடிச்சிருக்கா
பயப்படாமல் சொல்லேண்டி/
கண்ணழகு மூக்கழகு கண்மணியே உன்னழகு/
கண்மூட முடியாமல்
கலக்கி அடிக்குதடி/
பொன்னான உன்பாதம்
மண்ணான சேற்றிலே/
மடங்கிப் போகாமல்
மாமன் தாங்குவேண்டி/
கன்னக் குழியழகும் கருங்கூந்தல் பேரழகும்/
அன்ன நடையழகும் அசத்துதடி என்மனசை/
பண்ணாலே பாட்டிசைத்து பம்பரமாய் நாற்றுநட/
காதல் பெருகுதடி காளைமனம் ஏங்குதடி/
வண்ணக் கிளியழகே
வடிவான பெண்ணழகே/
வளையலும் சினுங்குதே
வருவாயோ எனதருகே/
தருவாயா உன்மனசை
தாங்குவேண்டி காலமெல்லாம்/
முருகன் முறைப்படியே
அருகில்வந்து அமரேண்டி/
கமலா ஜெயபாலன்