சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

வலைப்பூ
ஓடுகின்ற வாழ்வனிலே உண்மைகளைத் தேடுகிறோம்
ஆடுகின்ற ஆட்டத்தில் அரும்பாடு படுகின்றோம்
வாடுகின்ற மனிதர்களும் வலைத்தளத்தால் உறுளுகிறார்
பாடுபட்டு உழைத்தாலும் பலனில்லை இதனாலே

வலைப்பூ வந்ததினால் வாலிபங்கள் மகிழ்வடைய
தலைப்புத் தெரியாமல் தலைகீழாய் வாழ்வோட
வல்லவர் வாழ்வும் வானுயர்ந்து கோலோச்ச
நல்லவரும் வழிதவறி நாசமாய்ப் போனதுண்டு

உண்மையை அறிந்து உலகினில் வாழ்வோம்
கண்ணின் இமையாய் காப்போம் வையகத்தை
நன்மை அறிந்து நல்லதை எடுப்போம்
துன்பம் வராமற் சுற்றம் காப்போம்/

கமலா ஜெயபாலன் சந்தம் சிந்தும் சந்திப்புக்காக