சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

கற்றவரின் சிறப்பு
—————————-
மண்ணில் மனிதனாய் மாண்புடன் வாழ்ந்திடுவோம்-கற்றதினால்
பண்பைப் பெருக்கியே பக்குவமாய்க் கூடிடுவோம்-கற்றதினால்
விண்ணிலே விடிவெள்ளி போலவே விளங்கிடுவோம்-கற்றதினால்
கண்ணில் மணியெணக் காப்போம் மனிதரைக்-கற்றதினால்

கமலா ஜெயபாலன்