விடுதலைக் களிப்பு
சந்தம் சிந்தும் சந்திப்பு 232
குடும்பமாய் குதூகலம் கொண்டிடும் பெருமிதம்
தடுமாறும் மனங்களும் தைரியம் கொண்டிடும்
விடுமுறை என்றதும் விண்ணி்ல் பறப்பது
கடுமை உழைப்புக்கு காலத்தின் கொடையது
நாடு நாடாய் நாய்போல வாழ்ந்தாலும்
நாடி ஓடி நலனைத் தேடி
வாடா மருந்தாய் வாழ்வை மாற்ற
விடுமுறை வேண்டும் விருப்புடன் வாழ
நன்மை தீமை நல்லது கெட்டது
எல்லாம் மறந்து இன்பக் களிப்பில்
இருப்பது ஒன்றே இனிமையின் உச்சம்
இதுவே உலகின் இயல்பே ஆகும்
கமலா ஜெயபாலன்