சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மார்கழி
நட்சத்திரங்கள் நாட்டிற்குள் வரும்
நள்ளிருட்டு நீண்டிருக்கும்
மார்கழி என்றால் மனமும்
மகிழ்வுடன் கொண்டாடும்
குளிருக்குக் கம்பளிப் போர்வை
கொடுக்கும் சூட்டை
வழியெல்லாம் வாகன நெரிசல்
வாங்குவார் பரிசில்கள்
உறவெல்லாம் ஒன்று கூடும்
உண்டுகழிக்கும் ஒற்றுமையாய்
ஆலயங்கள் ஆராதிக்கும் மனம்
அன்புடன் நிறைந்திருக்கும்
மார்கழி நீராடி மங்கையர்
மார்க்கண்டன் புகழ்பாடி
தெருவெல்லாம் சங்கூதிக் காலை
திருவெண்பா பாடுவர்பாரீர்
இருட்டில் ஒளிவீசும் இன்பம்
இருக்கும் மார்கழியில்
தைபிறந்தால் வழிபிறக்கும்
தங்கமே தங்கம்/
கமலா ஜெயபாலன்