சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

நடிப்பு
நல்லது நடிப்பு நாலுபேர் சிரிப்பு
நலமாய் வாழ நமக்கது வேண்டும்
வல்லமை கொண்டு வாழ்வது இன்பம்
வரட்டுக் வாழ்வு நடிப்பின் உச்சம்/

அன்பு என்ற ஆயுதம் உலகில்
ஆளும் உண்மை ஒன்றே மெய்யாம்
என்பும் பிறர்க்கு உரித்தாம் என்று
எழுதி வைத்தார் வள்ளுவர் அன்று/

முகத்தில் மூடி அணிந்து வாழும்
மூடர் கூட்டம் இருக்கும் வரையும்
நேர்மை என்ற நீதி மறையும்
நன்மை யாவும் நலிந்து மறையும்/

உள்ளும் புறமும் உண்மை வேண்டும்
கள்ளம் இல்ல அன்பு வேண்டும்
திண்ணம் ஆன தீர்ப்பு வேண்டும்
தீமை எல்லாம் தீர வேண்டும்/

கமலா ஜெயபாலன்