சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

சுடர்
இன்பம் பெருகி இன்னல் நீங்கிடும்
இதயச் சுடரும் இதமாய் மாறிடும்
அன்பின் நாதம் அழகாய் பிறந்துடும்
அதற்காய் என்பும் இசைந்தே உருகிடும்

கண்ணில் கண்ட காட்சிகள் யாவும்
கருணை வடிவாம் கடவிளின் கொடையாம்
எண்ணில் அடங்கா ஈகைச் சுடர்கள்
எரிந்தன மண்ணில் ஏங்கின மனமும்

விண்ணிற்கு அழகு விண்மீன் கூட்டம்
விடுதலை என்பது வீரனின் கனவு
பண்ணில் பருகிடும் பழரசம் இனிமை
பலரும் ஏற்றிடும் பாசமும் சுடரே

ஒளியின் சுடரில் உலகம் உருழுது
உழவன் வாழ்வும் உயருது இதுவால்
வளியும் வீசியே வாழ்திடும் உயிர்கள்
வந்திடும் வசந்தம் வாழ்வினில் மலர்ந்தே