சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மாசிப் பூ
மாசிப் பனியும் மூசிப் பெய்ய
மகிழ்வாய்ப் பூக்கள் பூத்துக் குலுங்க
பாசி படர்ந்த நிலமும் வழுக்க
பகலும் கொஞ்சம் படரந் தொடங்கும்
கீச்சிடும் குருவிகள் கிளைதேடும் அமர
கிழங்குகள் துளிர்த்து கிழக்கும் வெளித்து
பச்சைப் புல்லில் பனித்துளி தொங்கும்
படரும் பனியில் பாதம் விறைக்கும்
இதுவும் மழகு இன்ப வுணர்வு
இயற்கையின் கொடையே இறைவன் படைப்பே/