சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

மொழி
=======
அழகிய மொழியே
அமுதினும் இனிதே
பழகிடப் பண்பே
பருகினால் கடலே
வழங்கினாய் கொடைகள்
வருங்காலம் புகழே
உழல்கின்றோம் உன்னில்
உயிராக என்றும்

தொன்மையில் முதலாய்த்
தோன்றினாய் உலகில்
தன்மையில் நீயோர்
தனித்துவம் ஆனாய்
அன்பினால் மனதை
ஆழ்கின்றாய் தாயாய்
உன்னுடன் வாழ
உயர்வினைத் தருவாய்

இலக்கண நூல்கள்
இயம்பினாய் வலுவாய்
இலக்கியம் பலதால்
இவ்வுலகை வென்றாய்
பலகோடி நூல்கள்
பாரிற்குத் தந்தாய்
பலபேரும் வியந்து
பார்க்கின்றார் உன்னை

வங்கத்தில் தோன்றி
வழிபல கொண்டாய்
சங்கங்கள் வளர்த்துச்
சரித்திரம் கண்டாய்
அங்கங்கள் பலதில்
அழகினில் மிளிர்ந்தாய்
எங்கினும் உண்டோ
எம்மொழி போல.

ஒளவை.