சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

ஆதவன்
========
ஆதவனே அருட்கடலே அழகே அன்பே
அருள்தருவாய் பூமிக்கே இரங்கி என்றும்
மோதவரும் தீமைகளை மேவி நின்று
மேன்மையுடன் உன்னிடமே தாங்கி ஏற்பாய்
மாதமெல்லாம் மாண்புடனே ஒளிர்ந்து மண்ணில்
மலர்கின்றாய் எங்களுக்குத் தெய்வம் போலே
நாதனாக உன்னையுந்தான் நாமும் எண்ணி
நவில்கின்றோம் நன்றிதனைத் தொழுது நாளும்.

ஒளவை.