சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 204 “நீதியே நீ எங்கே? -எல்லாளன்- வழிமேலே விழிவைத்து வருமானம் குறியாய்
வஞ்சனையும் ஏமாற்றும் வாழ்வில் தம் நெறியாய்
பழிபாவம் இறைநீதிக் அஞ்சாத நெஞ்சம்
பாதம்படும் இடங்கலெங்கும் கெடுதி சூது வஞ்சம்
**
ஈவு இரக்கம் பொதுநீதி இறைபயமே இல்லார்
எதில் எங்கும் என்நாட்டும் முன்னணியில் உள்ளார்
காவிவரும் ஊடகங்கள் இவர் ஊழல்
கதைகள்
காலத்தால் அவை மறைய மீள மன்றில் இவர்கள்
**
தர்ம பொது ஸ்தாபனத்தை தாம் தொடக்கி இயக்கி
தமக்கென்று சம்பளமாய் உறவு பேரில் வறுகி
அபிவிருத்தி திட்டமென அறிக்கை காட்டி கறந்து
அதில் சிறிதை செலவு செய்ய கெளரவங்கள் விருது
**
சட்டத்தை ஏமாற்றி பணம் தொகையாய் கறந்து
தன் பெயரில் பொது சொத்தை மாற்றி தான் மடக்கி
விட்டெறியும் சில்லறைக்காய் சிலர் பந்தம் பிடிக்க
வீடு வரும் கறுப்பு பணம் வட்டிதரும்
சிறக்க
**முன் ஒன்றும் முதுகின் பின் இன்னொன்றும் பேசும்
முகமுடைய இவர் பையில்தான் சென்றடையும் காசும்
நின்றறுக்கும் தெய்வம் என்ற நீதி நெறி பொய்யா?
நீசருக்கே கெளரவங்கள் பணம் பதவி உய்வா?