சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

தமிழரின் நாடென்ற பெருமை
தாங்கிய தமிழக அரசின் பெருமை
எழில் மிகு கலாசார தொன்மை
எதையும் காப்பதில் வீறான வலிமை
மொழி வளம் பண்பாடு பக்தி
மூலத்தை பேண அதி ஆர்வம் முற்றி
அழகாக மனைதோறும் கோலம்
அதிகாலை மாலை அழகாக ஜாலம்

பதினாறு நூற்றாண்டின் முன்பு
பண்டய மன்னர் படைப்பாக நின்று
அதிசய கலைச் சிற்ப கோயில்
அறுபத்து மூன்று நாயனார் பாடல்
விதிமுறை தவறாது கட்டி
வீரிய கருங்கல்லில் வானையே முட்டி
திசையாவும் கோபுரம் சிற்பம்
திடமாக அழிவிலும் சிதறாது நிற்கும்.

மத சார்பு இல்லாத மாண்பு
மக்கள் வாழ் தரதை உயர்திட வீம்பு
பல நாடும் முதலிட நாட்டம்
பலமான தமிழகம் எழுப்பிட நோக்கம்
அயராத முதல்வரின் ஓட்டம்
ஆயிரம்யானை பலத்தினை காட்டும்
தமிழர் எம் அடையாள பூமி
தகராமல் காத்திடு தலைவனே
ஸ்ராலின்.