நெஞ்சின் அஞ்சலி
பல்துறையில் ஆற்றல்மிகு பாங்கு
பாமுகத்தில் பல்லாண்டு நீண்டு
நல்ல பல நிகழ்வுகளின் மூலம்
நாட்டினையே புகழோடு பேரும்
வல்ல திறனோடு பல ஆக்கம்
வந்து நூலால் அச்சுருவில் பூக்கும்
இல்லை இவர் குரல் இன்று என்று
இருந்த தினம் பாமுகத்தில் என்று?
வாதம் எனில் நக்கீரர் நாக்கு
வல்லுனரை இனங்காணும் மூக்கு
தோதாக அணியினரை சேர்த்து
சுவையாக தொகுப்பாயே கோர்த்து
ஏதேனும் குறையில்லா பெண்ணாய்
என்னாளும் முகம் மலரும் தன்னாய்
பூவதனம் பொன் வண்ண கோலம்
பொலிவான மிடுக்கும் அதில் கூடும்.
காலனுடன் மல்லாடும் போதும்
கண்டிலரே துயரை உனில் யாரும்
சால நல்ல கல்வி திறன் வீரம்
சந்ததிக்கே உண் டறிவேன் நானும்
மூலம் அது ஊர் மண்ணின் வீறு
மூச்சடங்கி போவாயோ கூறு
காலனிடம் உடல் வீழ்ந்த போதும்
காற்றலையில் நின் மூச்சு வாழும்
.