சந்தம் சிந்தும் கவிதை

-எல்லாளன்-

“நித்தம் பேணுவம் சுத்தம்”
*. அன்றொரு நாள் அதிகாலை வரையும் வேலை
அயர்ந் உறங்கி திடுக்குற்று எழுந்த வேளை
என்றனது பல் பிடுங்க பதிந்த நேரம்
இன்னும் சில நிபிடத்தில் என்று நானும்
அந்தரமாய் தயாராகி பல் டாக்குத்தர்
அமைவிடத்தை சேர பெயர் அழைக்க கேட்டேன்
வந்தமரும் வாய் திறவும் என்று அன்பாய்
அவர் தந்த கடைவாய் பல் பிடுங்கி விட்டார்

*வீட்டுக்கு திரும்பிய பின் குளிக்கப் போனேன்
வெறுப்படைந்தேன் என் தோற்றம் பார்த்து நானே
போட்டபடி பற்பசையும் பிறஸ்சின் மேலே
புறப்படுமுன் பல் துலக்க மறந்த தாலே
ஈட்டிமுனை போல் நரைகள் நாடி ஓரம்
இவற்றோடு வாய் நாற்றம் சகித்த வாறே
ஆட்டி மிக ஆறுதலாய் பல்லை பேர்த்த
அவர் பண்பை வியர்ந்தேன் கண் நீரை தேக்க

* தலை முழுகி மயிர் வெட்ட போவோமானால்
சலூன்காரன் சீராக பணி தெய்வானே
பலர் சூழும் பஸ் ரயிலில் பயண வேளை
பண்பாடு உடல் சுத்தம் பேணல் தேவை
அவைகளிலே உணவு பிற வரிசை சீரில்
அடுத்தவரை இடிக்காமல் நிற்போர்
நேரில்
இசை நடன உரை அரங்கில் அழுது பிள்ளை
இடையூறு செய்யவிடல் பண்பே இல்லை..,..