நித்திரையும் வர மறுத்த நிலையில் மனம் நேற்று
நெறி தவறும் உறவுகளின் நன்றியிலா போக்கு
எத்தனையோ அனுபவங்கள் இதுவரையும் கண்டும்
இளகுகின்ற என் மனதில் ஏமாற்றம் மீண்டும்
சொத்தென்று இருகும் ஒரே கடை மாடி மனையை
சொந்த இனம் நண்பரென நம்பி
தந்தேன் மனையை
குந்த வர வாடகைக்கு பதின்மூன்று ஆண்டு
கொடுப்பேன் நான் கேட்கையிலே
என்று நின்றார் நாண்டு.
பத்தினியாள் பாவம் அவள் பரிதாபம் பார்த்து
பணம் கூட்டி தரும்படியும் கோரவில்லை வருவாயை கேட்டு
நித்தமுமே உபசரணை மரியாதை காட்டி
நேர்மையுடன் வாடகையை கவுன்சில் மூலம் நீட்டி
அத்தனை நல் அன்போடு பழகியவர்
நேற்று
அகலோம் நாம் என்கிறாம் கவுன்சில்
சொல்லை கேட்டு.
விற்கவுள்ள நிலைமை கூட இரண்டாண்டாய் தெரியும்
வேறு பண் தேவை எனக்
உண்டென்றும் புரியும்
தங்களது தமிழ் உறவு காரர் பலர் இதுபோல்
தங்க வேறு இடமில்லை என சொல்லி மறுத்தோர்
சொந்த மனை காரர் தாங்கள்
வழக்குமாடி எழுப்ப
சொந்தமாக கவுன்சில் மனை பெற்றுள்ளாராம் நிலைக்க
நம்பி தந்த குற்றம் இனி ஆயிரமாய் கொட்டி
நகர்த்த வேணும் சில ஆண்டு வழக்கை நடை கட்டி
தங்க தமிழ் புலம் பெயர்ந்து
நெறி மறந்து போச்சோ
தன்னை நம்பி உதவியவன்
தலைக்கு இடி ஆச்சோ?