எதிர்ப்பலை
அதிருது அதிருதுகாலிமுகக் கரை
அலைகடலாய் அங்கு மக்கள் அலை
பதறுது பதறுது அரசகுலம்
பாராலும் அமைச்சவை நிர்மூலம்.
ஒக்றைக்குடும்ப ஆட்சியினால்
ஊழலால் பொருண்மிய வீட்சியினால்
கத்தை கத்தையாய் வெளிநாட்டில்
காசுகள் சொத்துகள் குவித்ததனால்
எரிபொருள் இல்லை விலைவாசி
எல்லாம் இழந்து குடிவாசி
உயர்த்த பணி புரியும் அதிகாரி
உணவுக்கு வரிசையில் பலகோடி
ஆட்சியை இறக்க போராட்டம்
ஆடுகிறார் இளம் படைக் கூட்டம்
வீட்சியில் இன மத வெறியாட்டம்
விடியட்டும் சமத்துவம் தாய்நாட்டில்